உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

Saturday, 14 December 2019 - 7:50

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
வட கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகரின் பிரத்தியேக உதவி அதிகாரி காவற்துறை அத்தியட்சகர் உபேந்ர என்பவரின் கவனயீனம் காரணமாகவே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான முன்னறிவித்தல்கள் காவற்துறை நிலையங்களுக்கு வழங்கப்படவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.

காவற்துறை அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழு முன் சாட்சி வழங்கிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் வெளியாகாத பல விடயங்கள் இந்த ஆணைக்குழு விசாரணையின் போது வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேன்முறையீட்டு நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஐவர் அடங்கிய ஆணைக்குழு முன் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற போது, கொட்டாஞ்சேனை காவற்துறை நிலையத்தின் ஆவணங்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்பட்ட காவற்துறை கான்ஸ்டபிள் நளின் பண்டார ஆணைக்குழு முன் நேற்று முன்தினம் சாட்சி வழங்கினார்.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் காவற்துறை மா அதிபரினால் காவற்துறை நிலையங்களுக்கு அனுப்பபட்டதாக கூறப்படும் கடிதம் கிடைக்க பெற்றதா இல்லையா என்பது தொடர்பில் வினவியுள்ளார்.

தாக்குதலுக்கு முன்னர் தமக்கு அவ்வாறன ஒரு கடிதம் கிடைக்க பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான கடிதம் ஒன்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாங்கள் அவதானிக்கவில்லையா என சட்டத்தரணி மீண்டும் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த காவற்துறை கான்ஸ்டபிள் நளின் பண்டார, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற தினம் பிற்பகல் கொட்டாஞ்சேனை காவற்துறை நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி பிரதான காவறதுறை பரிசோகதர் மகிந்த கருணாரத்ன தமக்கு அவ்வாறான கடிதம் ஒன்றை கையளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தை தாக்குதலுக்கு முன்னர் கிடைக்க பெற்றதாக பதிவு செய்யுமாறு அது எந்த தினத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை பின்னர் அறியதருவதாகவும் பிரதான காவற்துறை பரிசோதகர் மகிந்த கருணாரத்ன கூறியதாக கான்ஸ்டபிள் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips