%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Saturday, 14 December 2019 - 11:36
தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு
181

Views
தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாக்ராம் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்ற பின்னர் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அந்த நாட்டு அரசின் உதவியுடன் தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது.

அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.

இதன் காரணமாக தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் வலுத்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி கட்டார் தலைநகர் டோகாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலீபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானில் 2 நாள் போர் நிறுத்தத்தை கொண்டுவர இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றதால் அமெரிக்கா, தலீபான்களுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
25,415 Views
53,315 Views
520 Views
74,817 Views
359 Views
120,069 Views
Top