அமெரிக்க படையினர் சிலர் காயம்...

Friday, 17 January 2020 - 13:31

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...
ஈராக்கில் உள்ள அமெரிக்க வான்படை தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என பெண்ரகன் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில்இ 11 படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரியை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை உக்ரேன் விமானம் 176 பேருடன் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் ஈரான் மீது புதிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் தெஹ்ரானில் குறித்த விமானம் ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்டதில்இ 82 ஈரானியர்கள்இ 63 கனேடியர்கள்இ 11 உக்ரேனியர்கள் 10 சுவீடனியர்கள்இ 7 ஆப்கானிஸ்தானியர்கள்இ 3 பிரித்தானியர்கள் உட்பட மேலும் சில நாடுகளை சேர்ந்த 176 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் பிரித்தானியாஇ கனடாஇ உக்ரேன்இ சுவீடன் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் லண்டனில் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறித்த விமான விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைககு ஈரானிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பை அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் விபத்துக்கான இழப்பீட்டை ஈரான் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips