சீன சுகாதாரத்துறையினரின் பல்வேறு நடவடிக்கைகள்..

Sunday, 19 January 2020 - 13:46

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
புதிய வகையான கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் பரவி வரும் நிமோனியா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை சீன சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மட்டும் 17 பேர் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளது.

சீனாவின் புதிய வருடத்தை கொண்டாடும் நோக்கில் பல மில்லியன் சீனர்கள் பயணத்தை மேற்கொள்வதனால் இந்த நோயின் தாக்கம் மேலும்; அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இனம் காணப்பட்ட நோயாளர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் மத்திய நகரான வூஹாமை சேர்ந்த 62 பேர் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் ஏற்கனவே மரணமாகியுள்ளனர்.

இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.


இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளுக்கும் பரவும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையினை அடுத்து அமெரிக்காஇ ஜப்பான்இ தாய்லாந்துஇ தென் கொரியாஇ சிங்கப்பூர்இ மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகள் தொடர்பாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேபோன்ற பாரிய தொற்று ஒன்று கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சீனாவில் முதன் முதலாக இனம் காணப்பட்டது.

இந்த தொற்றுக்கு உள்ளானவர்களில் 800 பேர் உலகின் பல பகுதிகளில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளைஇ லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ ஆராச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனவரி 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினில் ஆயிரத்து 723 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும்இ உடனடி மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரும் நிதி நெருக்கடி
Sunday, 23 February 2020 - 12:50

கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியினில் முதல் முதலாக சர்வதேச... Read More

கொரோனாவினால் இரண்டாவது நபர் உயிரிழப்பு
Sunday, 23 February 2020 - 10:57

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.இத்தாலியில்... Read More

சிங்கப்பூரில் கொவிட்
Sunday, 23 February 2020 - 7:51

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர்... Read More