காவல் அதிகாரியின் கைத்துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் பலி

Sunday, 19 January 2020 - 14:41

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஹூங்கம பகுதியில் இடம்பெற்ற மோதலொன்றின் போது காவல் அதிகாரி ஒருவரின் கைத்துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் காயமடைந்த பிக்கு ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இரண்டு காவல்துறை அதிகாரிகள் உந்துருளி மூலமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் அவ்வழியே வாகனமொன்றில் சென்றுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயன்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கும் குறித்த நபருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காவல் அதிகாரியிடம் இருந்த கைத்துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் அருகில் சென்றுக்கொண்டிருந்த சிற்றூர்தியில் பயணித்த பிக்கு ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 21 வயதுடைய பிக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக அகுணகொலபெலெஸ்ஸ மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Thursday, 20 February 2020 - 11:06

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக... Read More

சாய்ந்தமருது நகரசபை விவகாரம்- இடைநிறுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
Thursday, 20 February 2020 - 10:42

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்காக வெளியிடப்படவிருந்த... Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ள விடயம்
Thursday, 20 February 2020 - 10:54

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாக்குப் பட்டியலில் இதயத்தின்... Read More