பிக்குவின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Sunday, 19 January 2020 - 15:37

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
ஹூங்கம - ஹாதகல - தெனிய வீதி பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தேரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

தங்காலை உதவி காவல்துறை அத்தியட்சர்கள் இருவரின் கீழ் இந்த விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உந்துருளியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள், சந்தேகித்திற்கிடமான உந்துருளி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் அதனை மீறி உந்துருளி செலுத்துனர் பயணித்துள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

பின்னர் அவரை கைது செய்ய முற்பட்ட போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வீதியில் பயணித்த சிற்றூர்தியில் பயணித்த தேரர் மீது பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான தேரர் அங்குணுகொலபெலஸ்ஸ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹாதகல ரஜமஹா விகாரையின் தேரர் என தெரியவந்துள்ளது.

அவர் மேலும் சில தேரர்களுடன் ஹூங்கமுவ பகுதியில் தர்ம நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே இந்த அனர்த்ததிற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு தொடர்பில் ஹூங்கம காவல்துறையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்த குறித்த அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips