நடவடிக்கைகள் மேலும் தாமதிக்கலாம்..

Monday, 20 January 2020 - 19:19

+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D..
வடக்கு கிழக்கை மையப்படுத்திய மாற்று கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் மேலும் தாமதிக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக இந்த கூட்டணியை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்க முயற்சிக்கப்படும் இந்தக் கூட்டணியில் அனந்தி சசிதரன் சிவாஜிலிங்கம் ஐங்கரநேசன்இ சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரின் கட்சிகள் இதுவரையில் இணைந்துள்ளன.

அந்த கட்சிகனுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தைப்பொங்கலுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்இ கடந்த வாரம் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 19ஆம் திகதியளவில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும்இ பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக இந்த கூட்டணியில் அங்கம் வகிக்க உத்தேசித்துள்ள அணிகளுக்கு இடையில் இண்ககம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோது பங்காளி கட்சிகளுக்கு இடையிலான ஆசன பங்கீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips