வாக்குமூலம் வழங்கிய முன்னாள் நீதிபதி ..

Monday, 20 January 2020 - 19:30

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+..
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகள் தொடர்பில் மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என் ரணவக்கவிடம் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு இரண்டு மணி நேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என் ரணவக்க இன்று பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார்.

இந்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் தொடர்புடைய சம்பவம் தொடர்பில்இ எம்பிலிப்பிட்டி மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நேற்றைய தினம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்த நீதிபதிகளிடம் காலம் தாழ்த்தாமல் வாக்குமூலம் பதிவு செய்யுமாறுஇ சட்டமா அதிபர் முன்னதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என் ரணவக்கஇ மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் நீதவான் தம்மிக்க ஹேமபால ஆகியோரிடம் உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்யுமாறுஇ கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவை சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

இதேநேரம் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் காரணமாகஇ நீதவான் தம்மிக ஹேமபாலஇ கடந்த தினம் நீதி சேவை ஆணைக்குழுவினால் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்ட்டார்.

அத்துடன் எம்பிலிப்பிட்டி மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பில்இ நீதி சேவைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips