உடனடியாக நிறுத்த வேண்டும்...

Tuesday, 21 January 2020 - 20:00

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 
குறித்த விடயம் தொடர்பில் நேற்று  வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கு 355 கோடி நிதி உதவியை மத்திய அரசு வழங்குவது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
 
இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் இலங்கை தரப்பினரால் இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர்.
 
அத்துடன் அவர்களின் மீன் பிடிப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட கருவிகளைப் பறிமுதல் செய்யப்படுவது தொடர்ந்து இடம்பெறுகின்றது.
 
இதேநேரம் இலங்கையில் தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படாதுள்ளது.
 
அவற்றை கருத்திற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு தமிழக மக்களின் வரிப் பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு நிதியளிப்பது மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ கூறியுள்ளார்.
 
எனவே இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்காக 355 கோடி ரூபா நிதி உதவி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips