வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு

Wednesday, 22 January 2020 - 21:50

%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+9%E0%AE%86%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சீனாவில் பரவிவரும் புதிய கொறொனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் ஊஹான் நகரிற்கு பயணிப்பதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நகர்ப்பகுதியில் மக்கள் கூட்டமாக ஒன்று திரள்வதை குறைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொறொனா வைரஸானது சீனா, தாய்லாந்து, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை சீனாவின் ஊஹான் நகரில் சுமார் 400 பேர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விலங்குகளை சட்டவிரோதமாக சந்தைகளில் உணவுக்காக விற்பனை செய்ததன் ஊடாக மனிதர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போது ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்செயல் சம்பவம்....!
Friday, 28 February 2020 - 19:58

இந்திய தலைநகரில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே... Read More

கொரோனா காரணமாக மற்றும் ஓர் பெரும் விபரீதம்..!!
Friday, 28 February 2020 - 12:57

கொவிட் 19 தொற்று பரவுவதால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய... Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை...! சுண்ணாம்பு குளத்தில் சம்பவம்
Friday, 28 February 2020 - 11:08

கட்டிட தொழில் செய்து மனைவி வீரம்மாள் மகள் தேவயானி மகன் பாலமுரளி... Read More