புதிய வகையான வைரஸ் தொற்று..

Thursday, 23 January 2020 - 20:56

+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
சீனாவின் மற்றுமொரு நகரம்இ புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுஹான் என்ற நகரத்தில் இந்த தொற்றுக்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் வாழும் இந்த நகரத்துடனான வாநூர்தி மற்றும் தொடரூந்து சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று அதன் அருகாமையில் உள்ள 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் ஹூவாங்கங் (ர்ரயபெபயபெ) என்ற நகருடனான போக்குவரத்து சேவைகள் அனைத்து நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

இது வரை 500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ள நிலையில்இ 17 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தொற்று வெளிநாடுகளிலும் பரவியுள்ளன.

சீன புதுவருடத்தை ஒட்டி மில்லியன் கணக்கான மக்கள் பயணங்களை மேற்கொண்டதன் காரணமாகவே இந்த தொற்று துரிதகதியில் பரவியுள்ளதாக மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

வுஹான்  நகரத்தில் இருந்து பயணிக்கும் பல வெளிநாட்டு வாநூர்த்தி சேவைகள் முற்று முழுதாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சீன சுகாதாரத்துறை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இது தவிர திரை அரங்குகள்இ நூலகங்கள்இ அருங்காட்சியகம் போன்ற மக்கள் அதிகம் கூடும் நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.


சீனாவிலிருந்து அவசரமாக இந்தியாவிற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ள 112 பேர்...!
Thursday, 27 February 2020 - 15:58

சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்திய விமானப் படை விமானம்... Read More

வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி..
Thursday, 27 February 2020 - 13:12

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில்... Read More

2 ஆயிரத்து 772 பேர் பலி
Thursday, 27 February 2020 - 8:04

கொவிட் 19 தொற்று காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியாக 2 ஆயிரத்து... Read More