இன்றைய தினத்திற்குள் கிடைக்க பெறும் ..

Friday, 24 January 2020 - 13:00

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+..
சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கமைய சேவையிலிருந்து நீக்கப்பட்ட எம்பிலிட்டி மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வது தொடர்பில் பரிந்துரை பெற்று கொள்வதற்காக பதில் காவற்துறை மா அதிபரால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவின் பரிந்துறைகள்  இன்றைய தினத்திற்குள் கிடைக்க பெறும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் அந்த குழு ஒன்று கூடி அது தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய முன்னாள் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிடியாணை உத்தரவை பெற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அந்த குழு பதில் காவற்துறைமா அதிபருக்கு அறியப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பரிந்துரை கிடைக்கபெறும் வரையில் அது தொடர்பான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனையை செயற்படுத்துவதற்காக 3 பிரதி காவல்துறைமா அதிபர்கள் அடங்கலாக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பதில் காவல்துறை மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை நீதிமன்ற உத்தரவை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு நேற்று ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடலில் ஈடுபட்ட நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான தொழில்நுட்ப சாட்சியை அந்த சேவையை வழங்கும் நிறுவனத்திடம் உடனடியாக பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கிஹான் பிலப்பிட்டிய தம்மிக ஹேமபால மற்றும் பத்மினி ரணவக்க ஆகிய நீதிபதிகளின் தொலைபேசி இலக்கங்களை பெற்று கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய அந்த நிறுவனங்களிடம் இருந்து அது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips