பீஜிங் நகருக்குள் நுழையும் சகலரையும் தனித்தனி அறையில் தடுத்து வைக்க தீர்மானம்

Saturday, 15 February 2020 - 13:07

%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
சீனாவின் பீஜிங் நகருக்கு பிற நகரங்களில் இருந்து பிரவேசிக்கும் சகலரையும் 14 நாட்கள் தனித்தனி அறையில் தடுத்து வைக்க அந்த நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து பீஜிங்கிற்கு பிரவேசிப்பவர்களுக்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என சீனா தெளிவுப்படுத்தவில்லை என சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கொவிட் 19 தொற்றால் இதுவரை ஆயிரத்து 525 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தொற்று காரணமாக உலகளாவிய ரீதியாக 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எகிப்தில் முதலாவது கொவிட் 19 தொற்றாளர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவரான அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 67 ஆயிரத்து 79 பேரில் 66 ஆயிரத்து 484 பேர் சீனாவின் வுபேய் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் ஜப்பானின் ஒக்கினாவா நகருக்கு அருகில் பயணிகள் கப்பல் ஒன்றில் கொவிட் 19 தொற்றால் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிங்கப்பூரில் 67 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

வைரஸ் தொற்று அவதானம் காரணமாக சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாயலங்களின் ஆராதனைகள் மறு அறிப்பு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை லண்டனில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் பங்குபற்றிய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த 250 பேருக்கும் அதிகமானவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த இங்கிலாந்து தீர்மானித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி லண்டனில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் பங்குபற்றியிருந்த சீன பிரஜையொருவர் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது.


வாகன விபத்தில் 4 பேர் பலி...  மேலும் சிலர் காயம்..!
Sunday, 23 February 2020 - 21:20

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம்... Read More

பல்வேறு கருத்துக்கள்..
Sunday, 23 February 2020 - 20:31

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்து ஆளும் ,எதிர்கட்சி... Read More

ஐக்கிய மக்கள் சக்தி இன,மத வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி..!
Sunday, 23 February 2020 - 19:52

ஐக்கிய மக்கள் சக்தி மதம் மற்றும் இன வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி... Read More