இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிறுமி உட்பட பெண்ணொருவர் பலி

Saturday, 15 February 2020 - 14:08

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வெல்லவாய-வீரவில வீதியில் உள்ள குடாஓய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தனது தாயுடன் விளையாடிக்கொண்டிருந்த போது பந்து பக்கத்து தோட்டத்திற்குள் விழுந்துள்ளது. குறித்த பந்தை எடுப்பதற்காக பாதையை கடந்து செல்ல முற்பட்ட போதே மேற்படி சிறுமி மகிழூர்தி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கொடகம-பொரள்ளை வீதியின் பனாகொடை சந்தியில் வீதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி ஒன்றுடன் வேகமாக வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்த பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். உந்துருளியில் பயணித்த 6 வயது சிறுமி பலத்த காயங்களுடன் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் காரணமாக வாகன நெரிசல்
Wednesday, 26 February 2020 - 11:00

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டம் காரணமாக... Read More

வெப்பநிலை உயர் நிலையில்..
Wednesday, 26 February 2020 - 10:53

வடமேல் மேல் மாகாணங்கள் காலி மாத்தறை மான்னார் மாவட்டங்களில்... Read More

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவல்
Wednesday, 26 February 2020 - 10:18

நிலவும் வறட்சியான காலநிலைக காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு... Read More