மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயங்க வீரதுங்க

Saturday, 15 February 2020 - 15:09

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F++%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிறைச்சாலை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோய் நிலைமை காரணமாக மருத்துவர்கள் நேற்றைய தினம் உதயங்க வீரதுங்கவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதனையடுத்து நேற்று இரவு அவர்இ சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்றைய தினம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைய உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீதிகளில் பயணிப்பதற்கான அனுமதியில் மாற்றம்
Wednesday, 08 April 2020 - 7:48

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலத்தில், தடையின்றி வீதிகளில்... Read More

பிரதமர் நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரை
Wednesday, 08 April 2020 - 7:38

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது அவசியமற்றது... Read More

சூரியனின் உதவும் கரங்கள் நிவாரண பணிகள் (காணொளி)
Wednesday, 08 April 2020 - 7:50

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, மிகவும்... Read More