ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

Sunday, 16 February 2020 - 18:27

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று அதிகாலை ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று அதிகாலை ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த பசுமை மண்டலத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன.

அப்பகுதியில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன. அதனால் ஏற்பட்ட கட்டிட சேதங்கள் பற்றி உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை. ஏவுகணை தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப் பேற்கவில்லை. ஆனால் ஈரான் பின்னணியில் உள்ள குழுக்கள் தான் தாக்குதலை நடத்தி உள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டி உள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips