காதலர் தினத்தன்று சிக்கிய சிறுவயது காதலர்கள்...!

Monday, 17 February 2020 - 11:36

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
காதலர் தினத்தில் கொழும்பில் சிறுவயது காதலர்கள் செய்த காரியம்....!

கொழும்பு மெட்லண்ட் பகுதியில் காதலர் தினத்திற்கு முன்னதாக சிறுவயது இளைஞர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

இரவு வேளைகளின் இளைஞர்கள் வந்து செல்வது வழமைக்கு மாறாக காணப்பட்டுள்ளது.

இலங்கை கலால் வரி திணைக்கள உத்தியோகத்த்தர்கள் இரகசியமான முறையில் அவதானித்து வந்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதி ஒன்று இயங்கி வருகின்றமையை கண்டறித்துள்ளனர்.

சுமார் இரண்டு வாரங்களாக அவதானித்து வந்த கலால்வரி திணைக்கள அதிகாரிகள் கடந்த 14 ஆம் திகதி இரவு அன்று விடுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

சொகுசு கார்களில் இளைஞர்கள் யுவதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திறங்கினர்.

களியாட்ட விடுதிக்கு வருகை தந்தவர்களின் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வருகை தந்துள்ளார்.

சிறிது நேரம் சென்றதும் சுமார் 100 முதல் 150 பேர் வரையில் சிறுவயது காதலர்கள் களியாட்ட விடுதிக்கு வந்தடைந்தனர்.

பாடல்களுக்கு நடனமாடியவாறு சிறு வயது காதலர்கள் போதையில் மூழ்கிப்போயிருந்தனர்.

திடீரென உட்புகுந்த கலால்வரி திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் அதிரடியாக ஈடுபட்டனர்.

சோதனைகளின் போது ஒரு தொகை கொக்கைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் குறித்த போதை பொருளை விநியோகித்த 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த பெண் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 10 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்கள் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் களியாட்ட விடுதியின் உரிமையாளரிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா - சற்று முன்னர் ஒருவர் அடையாளம்....!
Wednesday, 08 April 2020 - 19:28

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மேலும் ஒருவர்... Read More

சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....!
Wednesday, 08 April 2020 - 19:08

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை... Read More

டெஸ்போர்ட் தோட்டத்தில் சந்தா பணம் அறவிடவில்லை....!
Wednesday, 08 April 2020 - 18:57

நானுஓயா டெஸ்போட் தோட்ட தொழிலாளர்களிடமிருந்து இந்த மாதத்திற்கான... Read More