சிங்கப்பூரில் தமிழ் மொழி தின விழாவை ஒத்திவைக்க தீர்மானம்

Monday, 17 February 2020 - 12:50

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரை சர்வதேச ரீதியில் ஆயிரத்து 775 பேர் உயிரிழந்தனர்.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் 71 ஆயிரத்து 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்19 தொற்று காரணமாக 105 பேர் உயிரிழந்ததுடன் 2 ஆயிரத்து 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்துவருவதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 10 ஆயிரத்து 844 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனா தவிர்ந்த ஹொங்கொங், தாய்வான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக சிங்கபூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த நிலையில் மக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிங்கபூருக்கான தமிழ் பேரவையின் பணிப்பாளர் எஸ் மனோகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கொவிட் 19 தொற்று காரணமாக சிங்கபூரில் 75பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஸ்பெயினில் 14,555 பேர் பலி....!
Wednesday, 08 April 2020 - 18:44

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 510 பேர் பலியாகியுள்ளனர்.... Read More

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பொரிஸ் ஜோன்சன்..!
Wednesday, 08 April 2020 - 8:05

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிசிச்சை... Read More

கொரோன தொற்றுக்கு உள்ளாகிய ஹமீட் பகயோகொட
Tuesday, 07 April 2020 - 17:13

ஐவெரிக்கொஸ்ட் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமீட் பகயோகொட,... Read More