ஜனாதிபதி செயலகம் முன்பாக இருவேறு போராட்டங்கள்..!

Monday, 17 February 2020 - 13:45

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தி அமைப்பானது ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

யுத்த நிலமையினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய முப்படையினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு நிகரான தொகை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் அவர்களது மனைவிமார்கள் குழு போட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த போராட்டக் குழுவினருடன் ஜனாதபதி செயலக குழுவொன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஹிரு செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து தொழில்வாய்ப்பை இழந்த குழுவினரும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் சிறிது நேரத்திற்கு முன்பு குறித்த குழுவிலிருந்து சிலரை பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips