சொகுசு கப்பலில் கொரோனா - இலங்கையர்களும் உள்ளே..

Tuesday, 18 February 2020 - 7:31

%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87..
ஜப்பானின் யோகோகமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் இலங்கையர்கள் இரண்டு பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அவர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
குறித்த இருவரும் அந்த சொகுசு கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
3 ஆயிரத்து 700 பயணிகளுடன் பயணித்த இந்த டயமண்ட பிரின்ஸஸ் கப்பலில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் கப்பலில் இருந்த 455 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
 
இதேவேளை, குறித்த சொகுசு கப்பலில் இருந்த 400 அமெரிக்கர்கள் நேற்றைய தினம் இரண்டு விமானங்கள் ஊடாக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
 
மேலும் 40 அமெரிக்கர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டதையடுத்து  அவர்கள் ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
 
இதேவேளை அந்த கப்பலில் உள்ள இரண்டு இலங்கையர்களும் அவர்களது உறவினர்களுடன் தொடர்பு கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கப்பலில் உள்ளவர்கள் 14 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பணிக்குழாம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் கப்பலில் தங்கியிருக்க வேண்டும் என கப்பல் நிர்வாகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 


சூரியனின் உதவும் கரங்கள் நிவாரண பணிகள் தொடர்ந்தும்...!
Wednesday, 08 April 2020 - 20:25

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, மிகவும்... Read More

சாராயம் கொரோனாவை குணப்படுத்தும் என்று நம்பி குடித்த 600 பேர் பலி...!3000 பேர் கவலைக்கிடம்...!
Wednesday, 08 April 2020 - 20:24

கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில்... Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்துக்கும் அதிகம்..!
Wednesday, 08 April 2020 - 19:53

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்... Read More