பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tuesday, 18 February 2020 - 8:11

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
கொவிட் 19 தொற்றால் சர்வதேச ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 868 ஆக உயர்வடைந்துள்ளது.
 
அதேநேரம் சீனாவின் வுபேய் பிராந்தியத்தில்; கொவிட் 19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் பலியாகியுள்ளனர்.
 
அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை ஆயிரத்து 789 பேர் உயிழந்துள்ளனர்.
 
அதேநேரம் குறித்த தொற்றால் அங்கு ஆயிரத்து 807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை 59 ஆயிரத்து 989 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதேவேளை வுபேய் பிராந்தியத்தில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி 41 ஆயிரத்து 957 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களில் ஆயிரத்து 853 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதேநேரம் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 862 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில் கொவிட் 19 தொற்றால் சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஸ்பெயினில் 14,555 பேர் பலி....!
Wednesday, 08 April 2020 - 18:44

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 510 பேர் பலியாகியுள்ளனர்.... Read More

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பொரிஸ் ஜோன்சன்..!
Wednesday, 08 April 2020 - 8:05

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிசிச்சை... Read More

கொரோன தொற்றுக்கு உள்ளாகிய ஹமீட் பகயோகொட
Tuesday, 07 April 2020 - 17:13

ஐவெரிக்கொஸ்ட் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமீட் பகயோகொட,... Read More