மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரனையை விலக்கி கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Tuesday, 18 February 2020 - 18:38

%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கடந்த அரசாங்கத்தினால் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான 30 கீழ் 1 மற்றும் 40 கீழ் 1 ஆகிய பிரேரனைகளுக்கு வழங்கப்பட்ட இணை அனுசரனையை விலக்கி கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த யோசனைகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்பதினால்; அதிலிருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த தீர்மானம் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் ஊடாக அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக இந்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடரின் போது அதனை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips