நாய் மீதான தாக்குதல் சம்பவம்- சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Wednesday, 19 February 2020 - 15:23

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
குளியாபிடிய பகுதியில் உள்ள வீடொன்றில் செல்லப்பிராணியாக வளர்ந்து வந்த நாய் ஒன்றின் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விலங்குகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாயின் கண் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ள நிலையிலான நாயின் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பில் எமது ஹிரு செய்திப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததில் குறித்த நாயினை பலமான காயங்களுடன் குளியாபிடிய-தண்டகமுவ கால்நடைகள் வைத்திசாலையொன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 3 அங்குலம் ஆழத்திற்கு குறித்த நாயின் முகத்தில் தடம் பதிந்துள்ளதாக கால்நடைகள் வைத்தியர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நாயின் நிலை தேறி வருவதாகவும் கால்நடைகள் வைத்தியர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாயின் உரிமையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் விலங்குகள் அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips