நடுக்கடலில் சிக்கித்தவித்த 300 அகதிகள் மீட்பு

Wednesday, 19 February 2020 - 21:41

%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+300+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக இறப்பர், பைபர் உள்ளிட்ட படகுகள் மூலம் அதிக எண்ணிக்கையில் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் திரிபோலி கடல் எல்லை வழியாக ஐரோப்பாவுக்கு நுழையன்று நடுக்கடலில் சிக்கித்தவித்த 300 அகதிகளை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் லிபியாவில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் லிபியா கடல்பகுதி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையமுயன்று நடுக்கடலில் சிக்கித்தவித்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளனர் என சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips