விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

Thursday, 20 February 2020 - 6:53

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
அவுஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையத்திலிருந்து நேற்று காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் 2 விமானங்களும் அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கின.

இந்த கோர விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்த 2 பேரும், மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பலியாகினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் காலநிலை மாற்றம்...!
Saturday, 28 March 2020 - 21:04

கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அமெரிக்காவில்... Read More

கடந்த 24 மணித்தியாலங்களில்  832 பேர் பலி....!
Saturday, 28 March 2020 - 19:19

ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக... Read More

கொரோனாவை தடுக்க சர்வதேச நாடுகளில் புதிய திட்டங்கள்..!
Saturday, 28 March 2020 - 17:23

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் அயர்லாந்தில்... Read More