இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூவர் அகால மரணம்.....! கார்ட்டூனிஸ்ட் மதன் சோகத்தில்

Thursday, 20 February 2020 - 10:07

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.....%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
'இந்தியன் 2' படபிடிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சென்னை - பூந்தமல்லி - ஈவிபி பில்ம் சிட்டியில் படபிடிப்பு நடைபெற்றுவருகின்றது.

படபிடிப்பு இரவு வேளைகளில் நடைபெற்றதாக அதிக வௌிச்சத்திற்காக சுமார் 150 அடி உயரத்தில் மின்விளக்கு (லைட்) அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது அவர்களை தாங்கி நின்ற மின்தூக்கியானது திடீரென சரிந்து பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் பிரிதொருவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மது, இந்திரன் மற்றும் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேரே இவ்வாறு பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு படத்தினை தயாரிக்கும் நிறுவனம் நட்டஈடு வழங்க பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது நடிகர் கமல், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் இருந்துள்ளனர். இடைவேளை நேரம் என்பதால் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 

விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் இளைய மகள் அமிதாவின் கணவர் என்பது குறிப்பிடதக்கதுஇயக்குநர் சங்கரின் இயக்கத்தில், சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேனாதிபதியாக கமல்ஹாசன் தொடர்கிறார். சஞ்சய்  தத் நெடுமுடி வேணு கிருஷ்ணசாமியாக தொடர்கிறார். அனிருத் பாடல்களுக்கும், டிஜே ரேஷ் பின்னணிக்கும் இசையமைக்க உள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் காலநிலை மாற்றம்...!
Saturday, 28 March 2020 - 21:04

கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அமெரிக்காவில்... Read More

கடந்த 24 மணித்தியாலங்களில்  832 பேர் பலி....!
Saturday, 28 March 2020 - 19:19

ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக... Read More

கொரோனாவை தடுக்க சர்வதேச நாடுகளில் புதிய திட்டங்கள்..!
Saturday, 28 March 2020 - 17:23

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் அயர்லாந்தில்... Read More