அரசாங்கத்தை தோற்கடிக்க புதிய கட்சியா..? குமார வெல்கமவின் அதிரடி அறிவிப்பு

Thursday, 20 February 2020 - 11:44

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%3F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குமார வெல்கம இதன்போது சுட்டிக்காட்டினார்.

தாம் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் குமார வெல்கம மேலும் தெரிவித்தார். இருப்பினும் இதுவரையில் தனக்கு 5 பிரதான கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.

தான் உருவாக்கவுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகள் தோல்வியுறும் பட்சத்தில் என்னை அழைத்த 5 கட்சிகளில் ஒரு கட்சிக்கு தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளதாகவும் வெல்கம குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நாட்டுக்குள் இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டார்.


கொரோனா காரணமாக இலங்கையர் ஒருவர் லண்டனில் பலி
Saturday, 28 March 2020 - 23:26

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் லண்டனில்... Read More

அதிரடியாக ஒருவர் கைது...!
Saturday, 28 March 2020 - 22:58

கொரோனா தொடர்பில் தவறான கருத்துகளை பரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா...!
Saturday, 28 March 2020 - 20:42

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம்... Read More