சாய்ந்தமருது நகரசபை விவகாரம்- இடைநிறுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

Thursday, 20 February 2020 - 10:42

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட நிலையில், அதனை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சாயந்தமருது பிரதேசத்தை நகர சபை பகுதியாக உருவாக்குவதற்காக, 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தின் நியமங்களை முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாட்டின் ஒரு பகுதிக்கு மாத்திரம் அல்லாமல், ஏனைய பகுதிகளுக்கும் இத்தகைய அவசியப்பாடு உள்ளமையினால், நாட்டுக்கு பொருத்தமான பொதுவான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக அந்த வர்த்தமானியை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் அதிகாரத்திற்கு வரும் வகையில், சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது ஒன்று முதல் 17 வரை கிராம அலுவலகர் பிரிவுகளை உள்ளடக்கியவாறு அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips