கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக பாதை மீண்டும் திறப்பு

Thursday, 20 February 2020 - 20:18

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தினை அடுத்து மூடப்பட்ட கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை நேற்றிரவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சீதுவ - அம்பலங்கமுல்ல நகரசபையிலுள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் பின்னர் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பரவியது.

இதனையடுத்து ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை மூட்டப்பட்டது.

இந்தநிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்திற்கு சொந்தமான பெல்-12 ரக உலங்குவானுர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் ஈடுபட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை நிலவும வறட்சியான காலறிலை காரணமாக சில வனப்பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கேகாலை - வதுர பகுதியிலுள்ள வனப்பகுதியில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டது.

அத்துடன் பீதுருதாலகால வனப்பகுதியிலும் நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips