100 இந்தியர்களை அழைத்துவர இராணுவ விமானத்தை அனுப்பவுள்ள இந்தியா

Friday, 21 February 2020 - 13:27

100+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
கொவிட்-19 தொற்று காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள வூஹான் நகரில் இருந்து சுமார் 100 இந்தியர்களை அழைத்து வர இராணுவ விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விமானத்தில் சீனாவுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தல் உள்ளது. அதே நேரத்தில் சீனாவுக்கு செல்ல தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

இராணுவத்துக்கு சொந்தமான சி-17 ரக விமானத்தில் சீனாவுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படவுள்ளன.

வூஹான் நகருக்குச் செல்லும் அந்த விமானம் மூலம் அங்கிருந்து சுமார் 100 இந்தியர்களை அழைத்து வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாய்நாடு திரும்ப விரும்புபவர்கள் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகலாம்.

சீனாவில் உள்ள இந்தியர்களின் நலன்களைக் காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips