இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை...

Saturday, 22 February 2020 - 19:42

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
அதேநேரம், பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த கோரிக்கைக்கு தாம் இன்னும் எந்தவித முடிவுகளை அறிவிக்கவில்லை என புதிய ஜனநாயக முன்னணி குறிப்பிட்டுள்ளது.
 
அது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை தமது கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் எடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின்  செயலாளர் சாமிளா பெரேரா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க குறிப்பிடுகையில், அன்னம் சின்னம் தேர்தலில் போட்டியிடுவதற்கு கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் வேறு ஒரு புதிய சின்னத்தில் தேர்தலில் களம் இறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
அதேநேரம், சின்னம் தொடர்பில் காணப்படுகின்ற சட்ட ரீதியிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே தீர்வு கிடைக்கப்பெறும்.
 
அதற்காக புதிய ஜனநாயக முன்னணியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips