இந்தியாவின் நம்பகரமான நட்பு நாடாக அமெரிக்கா செயல்படும்- அமெரிக்க அதிபர்

Monday, 24 February 2020 - 20:06

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D
இந்தியாவின் நம்பகரமான நட்பு நாடாக அமெரிக்கா செயல்படும் என இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு குஜராத் நகரான அகமதாபாத் நகரை சென்றடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளை கொண்ட கிரிக்கட் விளையாட்டு திடலில் மக்களின் பெரும் ஆரவாரத்தின் மத்தியில் “நமஸ்தே” என ஆரம்பித்த அவர், இந்த நகரத்தின் தேயிலை வியாபாரியின் மகனாக பிறந்த எனது நண்பர் நரேந்திர மோடி பாரதத்தின் பிரதமராக உயர்ந்தமை மிகப்பெரிய சாதனை என தெரிவித்தார்.

சகல தரப்பினரும் அவரை மிகவும் நேசிப்பவராக உள்ள போதிலும் அவர் சர்வதேச விடயங்களில் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளின் போது கடுமையான தன்மையை கொண்டவர் என குறிப்பிட்டார்.

அங்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவு சாதாரணமானது அல்ல என தெரிவித்தார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இன்று மாலை அகமதாபாத்திலிருந்து ஆக்ரா சென்ற நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு விஜயம் செய்கின்றார்.

அதன் பின்னர் அங்கிருந்து வாநூர்தி மூலம் புது டெல்லி செல்கிறார்.

நாளை அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

நாளைய கூட்டத்தில் முக்கியமாக இந்திய அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயங்கள் விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips