சீனாவிலிருந்து அவசரமாக இந்தியாவிற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ள 112 பேர்...!

Thursday, 27 February 2020 - 15:58

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+112+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D...%21

சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் 76 இந்தியர்கள் மற்றும் 7 பிற நாடுகளைச் சேர்ந்த 36 பேர் உட்பட 112 பேர் மீட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த 23 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர் மியான்மர் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த 2 பேர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்த தலா ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட அனைவரும் டெல்லியில் உள்ள கண்காணிப்பு மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விமானம் இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட முகமூடிகள் உள்ளிட்ட 15 டன் அளவிலான மருத்துவ உதவிப் பொருட்களை சீனாவில் இறக்கிவிட்டு பயணிகளை மீட்டு  சென்றமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips