288 பேர், தனிமைப்படுத்தல் நிறைவடைந்து வீடு திம்பினர்...!

Friday, 03 April 2020 - 17:45

288+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D...%21
ஐந்து தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 9 தேரர்கள் உட்பட 288 பேர், தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு அனு;பிவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா - பெரியகட்டு, தியத்தலாவை, குண்டசாலை, ரன்தெம்பை மற்றும் தனமல்வில முதலான தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தங்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பெரியகட்டு இராணுவ தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தனிமைப்படுத்ததல் நிறைவடைந்த 16 பேர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இறுதி குழு சேர்ந்தவர்களே அவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரைக்காலமும் 330 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வன்னி வான்படை முகாமில் மேலும் 206 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தியத்தலாவை இராணுவ விடுமுறை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 33 பேர் இன்று முற்பகல் தனிமைப்படுத்தல் நிறைவடைந்து வெளியேறியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகைதந்த கொழும்பு. கட்டுநாயக்க, பண்டாரகம மற்றும் மத்துகம முதலான பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறியதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips