ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பாராட்டு

Sunday, 05 April 2020 - 22:39

%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

ஏப்ரல் 2ஆம் திகதி ஏர் இந்தியா நிறுவனம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு, நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது.

மும்பையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்த போது, அந்நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டது.

அப்போது, ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவர்கள், அஸ்ஸலாமு அலைக்கும், கராச்சி கட்டுப்பாடு நிலையம், ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips