ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம் - கொரோனாவே காரணம்...!

Monday, 06 April 2020 - 17:23

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...%21
ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட 6 நகரங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அந்த நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேNளை, ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பின்னர் ஸ்கொட்லாந்தின் உயர் மட்ட மருத்துவ அதிகாரியான கேத்தரின் கால்டர்வுட்  (Catherine Calderwood) தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஸ்கொட்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொட்லாந்தின் உயர் மட்ட மருத்துவ அதிகாரியான கேத்தரின் கால்டர்வுட் (Catherine Calderwood) தமது மேலும் ஒரு வீட்டுக்கு இரண்டு முறை சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் அங்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அதனை மீறி செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் கொட்லாந்தின் உயர் மட்ட மருத்துவ அதிகாரியான கேத்தரின் கால்டர்வுட் (Catherine Calderwood) தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மனித சமூகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

எனினும் இந்தக்கூற்றைப் பொயப்;பிக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை 12 லட்சத்து 74 ஆயிரத்து 589 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உலகலாவிய ரீதியில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 840 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips