பிரதமர் நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரை

Wednesday, 08 April 2020 - 7:38

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது அவசியமற்றது என மக்கள் கருதுவதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் பின்னடைவைக்கண்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எமது அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அனைவரது அவதானம், அர்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தான் கொரோனா போன்ற பாரிய நோய் தொற்றில் இருந்து நாங்கள் வாழ்வதா அல்லது சாவதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

அதனால் இந்த நோய் தொற்று உலகிற்கு தெரிய வந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஜனாதிபதியுடன் அரசாங்கமும் மக்களின் வாழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளது.

தற்போது ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தக் கூடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் சுமார் 40 வரை எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் வெறுமனே தங்கும் இடங்கள் மாத்திரம் அல்ல சிறந்த மட்டத்தில் உள்ள கட்டடங்கள், கட்டில்கள், வைத்தியர்கள், உதவியாளர்கள், மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்கள், மலசலகூட வசதி, சுகாதார முறையிலான உணவு, சுத்தமான குடிநீர் என்பன வழங்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கானோருக்கு 14 நாட்களும் எந்த வித குறைவும் இன்றி பெற்று கொடுக்கப்படுகின்றது.

அதே போன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலை 6 நாட்களில் வெலிகந்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருபவர்களை பரிசோதனை செய்து நோய் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஆயிரக்கணக்கான நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று வீடுகளிலேயே வைத்து தனிமைப்படுத்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலை புறக்கணிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சமூகத்தை காப்பாற்றுவதற்காக அரச புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

மக்களை சிரமத்துக்குள்ளாக்காமல் மக்களின் தேவைகளை பூரணப்படுத்துவதே தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் எங்களுக்கு கொள்கையாக காணப்பட்டது.

அதனால் யுத்த காலத்தில் கூட முழுமையாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எங்களது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வியாபார நிலையங்கள் அதேபோன்று அரச காரியாலயங்களை மூடுவதற்கான நிலை ஏற்பட்டடுள்ளது.

அப்படி ஏற்பட்டாலும் மக்களின் வாழ்வியலுக்கு எவ்வித குறைவும் ஏற்படாத வகையில் அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான நிலையை பேணும் மிக முக்கிய பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது.

மின்சாரம், குடிநீர், எரிவாயு என்பனவற்றை குறைவில்லாமல் விநியோகிப்பதற்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடு முழுவதும் பகிர்ந்தளிப்பதற்கான பொறுப்பை ஜனாதிபதி மற்றும் எனது வழிக்காட்டலின் கீழ் அலரி மாளிகையில் இருந்து அதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு அத்தியாவசிய சேவை தொடர்பாக ஜனாதிபதி விசேட படையணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எடுக்ககூடிய சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் காரணமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி தற்போது சிறிய மற்றும் மத்தியதர வியாபாரங்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை.

அவ்வாறான நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என இறையாண்மையுள்ள மக்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அரசாங்கத்தின் நேரடி நிவாரணம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் விவாதங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

நாட்டின் வருமானம் சிறந்த முறையில் இருந்த போது இல்லாத நிலையிலும் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு நாங்கள் நிவாரணத்தை வழங்கியுள்ளோம்.

இப்போது அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கப்பெறும் சகல வழிகளும் தடைப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் சுற்றுலா தொழிற்துறை பாதிப்படைந்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை. எடுக்கவும் போவதில்லை.

சகல அரசியல் கட்சித் தலைவர்களும் மிகவும் ஆர்வத்துடன் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த தருணம் இது.

மதம், இனம் என்ற ரீதியில் பிரிந்து செயற்படக் கூடிய காலம் இதுவல்ல.

நாங்கள் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் இந்த உண்மையை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips