


ரஜினிகாந்தின் கோச்சாடையான் திரைப்படத்தின் காட்சிப் படுத்தல் பணிகள் இன்னும் ஆரம்பமாகவே இல்லை.
ஆனால் அதனை மொழிப்பெயர்க்கும் உரிமைய பெறுவதற்கு, தயாரிப்பாளர்கள் முண்டியடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தெழுங்கில் இந்த படத்தை மொழிப்பெயர்க்க பலகோடிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு தயாரிப்பாளர் இதற்காக 28 கோடி இந்திய ரூபாய்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இவை எதனையும் கருத்தில் கொள்ளாத திரைப்பட இயக்குனர் ஐஸ்வர்யா அஷ்வின், தமது இலட்சிய படைப்பை தயாரிப்பதில் வெகு பிரயாசம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.