


கோச்சடியான் திரைப்படத்துக்காக அதன் கதாநாயகி தீபிகா படுகோனின் உடல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவரது தோற்றம் முழுமையாக மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் முதல் முறையாக உடல் அசைவுக்கு ஏற்ப, விம்ப காட்சிகளின் நகர்வுகளை காட்சிப்படுத்தும் முறையிலான படிமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரெஹ்மான் இசை அமைக்கிறார்.
இதில் ரஜினிகாந்த், சிவபெருமான போல தாண்டவம் ஆடும் கட்சி ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த பாடலுக்கான காட்சிப் பதிவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


