





ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களை தெளிவுப் படுத்தும் நிகழ்வொன்று நேற்றைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது நாட்டின் தற்போதை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
எரிபொருள் விலை அதிகரிப்பு, மீன்பிடித்துறை மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பில் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கின்ற பிரசாரங்கள் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டதாக, ஜனாதிபதியின் ஊடக செயலகம் தெரிவித்துள்ளது.