வசூல் ராஜா
2012 ஏப்ரல் மாதம் 16 திங்கட் கிழமை- மு.ப 10:43
டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கெமரூன், ஹொலிவுட்டின் பெரிய வருமானம் ஈட்டுபவராக தொடர்ந்தும் காணப்படுகிறார்.
அவர் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்து, சர்வதேச ரீதியாக 1.82 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியது.
இந்த திரைப்படம் மீண்டும் முப்பரிமான அடிப்படையில் தயாரித்து வெளியிடப்பட்டது.
கடந்த வார இறுதியில் மாத்திரம் இது 190 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
ஏற்கனவே ஜேம்ஸ் கமரூன் வெளியிட்ட அவதார் திரைப்படம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் டைட்டானிக் திரைப்படம் மொத்தமாக 2.03 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
