பில்லா 2 பாடல் வெளியீடு
2012 ஏப்ரல் மாதம் 20 வெள்ளிக் கிழமை- மு.ப 08:38
நடிகர் அஜித் குமார் நடித்து வெளியாகவுள்ள பில்லா 2 திரைப்படத்தின் பாடல் வெளியீடு, அவரது பிறந்த தினமான மே மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த திரைப்படத்துக்கும் ஏற்கனவே பில்லா 1க்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் சிறந்த வெற்றியை பெறும் என படக் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை மே மாதத்திலேயே இந்த திரைப்படத்தையும் வெளியிட தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
