மாநிலங்களைவை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர்
2012 மே மாதம 31 வியாழக் கிழமை- மு.ப 08:59
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிவரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நூறு சதங்கள் பெற்ற சச்சின் டெண்டுல்கார், மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி முன்னிலையில் உறுப்பினராகப் பொறுப்பேற்கிறார்.
இந்த தகவலை மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
