பாகிஸ்தான் அணி வெற்றி
2012 ஜூன் மாதம் 04 திங்கட் கிழமை- மு.ப 08:00
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம் பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஒட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 122 ஒட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் சஹீட் அப்ரிடி ஆட்டமிழக்காது 52 ஒட்;டங்களை பெற்று கொடுத்தார்.
பந்து வீச்சில் நுவான் குலசேகர மற்றும் கௌசல் லொக்குஆராச்சி ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 99 ஒட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யசீர் ஹரபாத் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதனிடையே இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி சமநிலையில் நிறைவுற்றுள்ளது.
