அமெரிக்க தாக்குதலில் பலர் பலி
2012 ஜூன் மாதம் 04 திங்கட் கிழமை- பி.ப 07:19
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பிராந்தியத்தில் இன்று அதிகாலை அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலியானதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு வசிகிஸ்தான் பிரதேசத்தில் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இரண்டு ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் அல் - குவைடா மற்றும் தாலிபான்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதேசம் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, தொடர்ந்தும் அமெரிக்க விமான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தமது எதிர்பை தெரிவித்து வருகின்ற பொழுதிலும், கடந்த இரண்டு வார காலப்பகுதியினில் மட்டும் 8 விமான ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் மூன்று பேர் மட்டுமே போராளி குழுக்களைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராளி குழுக்களைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விடையம் குறித்து சுயாதீனமான முறையில் செய்திகளை பெற முடியாதுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
