கிரிக்கட் மீது அக்கறை - தோனி
2012 ஜூன் மாதம் 05 செவ்வாய்க் கிழமை- மு.ப 07:34
தாம் விளையாட்டு மீது வைத்துள்ள அதிதீவிர அன்பே போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணம் என இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
பாரமுல்லாவில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கட் போட்டிகளின் போது நாடு மற்றும் அணி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதுதவிர. கிரிக்கட் வீரர்கள் நாளாந்தம் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்;.
