


பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில், அல்கைடா இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர் அபு யஹியா அல் லிபியை,குறிவைத்தே நேற்று வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
எனினும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறித்த தலைவரும் உள்ளடங்கியிருக்கிறாரா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை
இதேவேளை அமரிக்கப்படையினர் வானூர்தி மூலம் நடத்திய ஏவுகனை தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது
இந்த தாக்குதல் சட்டவிரோதமான ஒரு தாக்குதல் என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்