இலங்கை அணி 76 ஆல் வெற்றி
2012 ஜூன் மாதம் 10 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 08:45
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது..
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்போது, திலகரட்ன தில்ஷான் 119 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்று தமது 13 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
ஐந்து போட்டிகள் கொட்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1:1 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சமனிலையில் உள்ளன.
இந்த நிலையில் மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது..
