சிரியாவில் மேலும் தாக்குதல்
2012 ஜூன் மாதம் 10 ஞாயிற்றுக் கிழமை- பி.ப 07:43
சிரிய துருப்பினர் மேலும் ஒரு பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையோர நகரான லடட்கியா மலை பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள போராளிகளுக்கு எதிராகவே இந்த தாக்குதலை தாம் மேற்கொண்டதாக சிரிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை முதல் இடம்பெறும் இந்த தாக்குதல்கள் இன்று உச்ச நிலையை அடைந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் போது, 58 துருப்பினர் கொல்லப்பட்டதுடன், 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திஸ்தாபனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பிரித்தானியாவை தமாக கொண்டுள்ள சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில், அரச துருப்பினரின் பாரிய இழப்புக்கள் மூலம் அந்த பிராந்தியத்தில் அதிக அளவிலான போராளிகள் நிலை கொண்டுள்ளமையை உணர்ந்துக் கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் சிரியாவில் இடம்பெற்று வரும் வன்செயல்கள் காரணமாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
