இங்கிலாந்து தொடரில் ஹசி இல்லை
2012 ஜூன் மாதம் 10 ஞாயிற்றுக் கிழமை- பி.ப 07:48
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடனான தொடரிற்கான அவுஸ்;திரேலிய அணியில் இருந்து மைக்கல் ஹசீ நீக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவி கடந்த மாதம் குழந்தை ஒன்றை பிரசவித்ததைத் தொடர்ந்து, மைக்கல் ஹசி அவரது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக குயின்ஸ்லாந்தின் பீற்றர் பொரஸ்ட் இணைத்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பொரஷ்ட் இதுவரை 11 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகிறது.
